a

Friday, 12 August 2011

பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி ?

உங்கள் கணினியை ஒரு மவுஸ், ஒரு ஆளிப்பலகை மூலம் கட்டுப்படுத்தி நீங்கள் களைப்படைந்து விட்டீர்களா? ஒருவித்தியாசமான முறைளில் உங்கள் கணினியை இயக்கவே இந்த திட்டம். அதாவது உங்கள் கண்களையே அதற்கு உபயோகப்படுத்துங்கள்.
 உங்கள் கண்களை பயன்படுத்தி  கணினியை இயக்குவதென்பது கண்களுக்கு ஒரு அப்பியாமாகவே அமைகிறது என்பதால் உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய குறை பாடுகளையும் இது குறைக்கிறது. அத்துடன் கணினியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவானதாக அமைகிறது.
தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணினியின் திரை, இயக்கும் நபரின் கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே, கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி (கீழிறங்கி) செல்லும் வகையில் இந்த லேப்டாப் (Laptop) வடிவமைக்கப் பட்டுள்ளது.
 இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர் (Eye Tracker), லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் (Infrared rays) பாய்ச்சுகிறது. இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளையும் விழித் திரைகளின் (Retina) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணினி செயல் படும் விந்தை நடக்கிறது. 
Share:

2 comments:

  1. ரொம்ப பிரமாதம் !

    ReplyDelete
  2. கவி அழகன் @உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Blog Archive