a

Wednesday, 28 February 2018

ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களுக்கு நேர்ந்த அதே துயரம்

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் அரசு படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிரியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தலைநகர் டமாஸ் குஷின் புறநகரான கிழக்கு கவுட்டா கடந்த 2012-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அதை சிரியா ராணுவம் சமீபத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது. சிரியா ராணுவத்துடன் ரஷிய போர் விமானங்கள் அதிரடி குண்டு வீச்சு நடத்தின. அதில் பதுங்கு குழிகளுக்குள் முடங்கி கிடந்த 556-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர்.

எனவே, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஐ.நா.வில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். அதை தொடர்ந்து சிரியாவில் மனிதாபிமான அடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

சிரியா முழுவதும் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் அதை மீறி கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா மற்றும் ரஷியாவின் போர் விமானங்கள் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தின.

அதில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே குண்டு வீச்சில் காயம் அடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த போது கிழக்கு கவுட்டாவில் குளோரின் ரசாயன குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. ரஷியா மற்றும் சிரியா ராணுவம் இணைந்து ரசாயன குண்டுகளை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால் இதை ரஷியா மறுத்துள்ளது. ரசாயன குண்டு வீச்சுக்கு சிரியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிரியாவும் ரசாயன குண்டு வீச்சை மறுத்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையே சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கவுட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:
Read More

Monday, 26 February 2018

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளதோடு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தும் அவ்வாறான தன்மையில் அமைந்துள்ளதன் அடிப்படையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு, இவ்வாரக் கேள்வி கொழும்பில் இருந்து வந்துள்ளது. கேள்வி பின்வருமாறு.

பத்திரிகையாளர் கேள்வி :- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் :- 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது. இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.

இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.

எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.

Share:
Read More

முன்னாள் ஜனாதிபதியை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கும் கருணா..

நமது நாட்டு (இலங்கை) அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது.

இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள். இவர்களது சொத்து மதிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை விட அதிகமாக இருப்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் தகவல்.

அந்த சஞ்சிகையின் படி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான் முதலிடம், அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.

முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்.

முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)

இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)

மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)

நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)

ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்)

ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)

ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)

எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)

ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)

பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்) இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.
Share:
Read More

Sunday, 25 February 2018

சாவே இல்லாத மனிதர் 2050 ல் இருப்பார்கள்

2050ம் ஆண்டில் சாவு அற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். இது அதிசயமாக இருக்கும் ஆனால் உண்மை. மனித வாழ்வு என்பது, இறுதியில் பார்த்தால் மூளையில் உள்ள நினைவுகள் தான். உடல் ஊனமாகிப் போகும். ஆனால் உண்மையில் மனித வாழ்வு என்பது, ஒருவரின் ஞாபகங்களே ஆகும். மூளை எப்போது இறக்கிறதோ. அன்றே மனிதனும் இறந்துவிடுகிறான் என்று பொருள். ஆனால் பலர் இதனை ஏற்க்க மாட்டார்கள்.

தற்போது விஞ்ஞானிகள் மனித மூளையில் உள்ள நினைவு செல்களை அப்படியே காப்பி செய்து. அதனை வைத்திருக்க கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் அதில் பயன் எதுவும் இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சாதனம், மூளையை போல இயங்க வல்லது. எனவே எமது ஞாபங்களை காப்பி செய்து அந்த சாதனத்தினுள் செலுத்தினால் போதும். அந்த மூளை உயிர்பெற்று விடும். இதனூடாக ஒருவர் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது இந்த இயந்திரத்தோடு உதடுகளை, கைகளை மற்றும் கால்களை பொருத்தவும்.

செயற்க்கை நியூரான்கள் கொண்டு அசைவுகளை ஏற்பாடுத்தவும் முனைகிறார்கள். இன்னும் 30 வருடங்களில் இது சாத்தியமாகிவிடும். இனி நாம் காரை வாங்கி வைத்திருப்பது போல இந்த சாதனத்தை வாங்கி, எமது நினைவுகளை மாற்றினால் போதும். எமது உடல் இறந்த பின்னனும் எமது மூளை உயிர்வாழும். இதனால் மனிதன் சாவைக் கடந்தும் வாழப் போகிறான்… இதுவே வருங்கால உண்மை ஆகும்…
Share:
Read More

தமிழில் பேசுவது அவமானம் இல்லை

சிங்கப்பூரில் உள்ள சீனக் கடை ஒன்றில், “தமிழில் பேசுவது அவமானம் இல்லை” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. கடையில் அவர்கள் தமிழில் பேசுகிறார்கள் என்பது மிக மிக ஆச்சரியமான விடையம். தமிழுக்கு அவ்வளவு மரியாதை தற்போது உலகில் கிடைத்து வருகிறது. சமீபத்தில் தான் கூகுள் அட் சென்ஸ் , தமிழையும் தனது அதிகார பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.

இதனூடாக இனி தமிழ் இணையங்கள் கூகுள் அட் சென்ஸ் விளம்பரங்களை போட்டு பணம் சம்பாதிக்கலாம். எனவே தமிழ் இணையங்கள் இனி பல்கிப் பெருகி உலகளாவிய ரீதியில் பெரும் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
Share:
Read More

Saturday, 24 February 2018

சீமான் , ஈழத்தமிழர்களுக்கு தலைவனாக முடியாது - Lathan Suntharalingam

சீமான் , ஈழத்தமிழர்களுக்கு தலைவனாக முடியாது - Lathan Suntharalingam
Share:
Read More

Wednesday, 21 February 2018

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த அறிகுறிகள் என்ன ?

வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .

காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.

முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.
இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.

ஆனால், இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காதல் படிகள் !

காமம்:
காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் (testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈர்ப்பு:
இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.

செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !

பற்று, பாசம்:
இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது!இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.

வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin):
நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.

விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.

இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.

அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !

"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா ?
Share:
Read More

வெல்லும் தமிழீழம்: – மே17

இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது. இந்த இன அழிப்பு குறித்தான விவாதங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் இனஅழிப்பு நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டு வருவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையம் இன்றுவரை ஏற்க மறுக்கிறது.

அங்கு நடந்தது போர்க்குற்றம்கூட அல்ல என்று உலகநாடுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நம்பவைத்து வருகின்றன. வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்த விவாதங்களை எழுப்பப் போகிறோம்” என்கிறது மே-17 இயக்கம். இந்த விஷயத்தில் உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இலங்கையில் தமிழீழம் மலர வேண்டும் என்றால், அது அனைத்துத் தமிழர்களும் சாதி, மதம் கடந்து ஒன்றிணைந்து குரல்கொடுத்தால் மட்டுமே சாத்தியம். இதற்காக தமிழர்களை ஒன்றிணைக்கும் முன்னோட்டமாக தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று ‘வெல்லும் தமிழீழம்’ என்ற பெயரில் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது மே17 இயக்கம்.

நான்கு கட்ட அமர்வுகளாக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி தொடங்கி வைத்தார். தமிழீழம் அமைய வேண்டி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மாநாடு தொடங்கப்பட்டது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இயக்குநர் அமீர், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்களும், சட்டப் பேராசிரியர்களுமான யொரெம்பே முடும் மற்றும் மாலேம் மங்கள் ஆகியோர் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் பற்றி உரையாற்றினார்கள்.

‘தமிழீழம் பற்றிய கனவு ஒரு போதும் ஓயாது’ என்பதை அப்பட்டமாகக் காட்டியது இந்த மாநாடு. காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மாநாடு இரவு 9 மணிக்கு அதாவது 12 மணிநேரத்தில் முடிக்கப்பட வேண்டும். ஆனால், மாநாடு முடிய இரவு 11.30 மணியைத் தாண்டியது. சரியாகச் சொன்னால், 14.30 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மாநாடு நடைபெற்றது. அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளைவிட அதிகமாக, மக்கள் கூட்டம் அலைமோதியது. உண்மையைச் சொன்னால் மாநாடு நடந்த அந்த 14.30 மணி நேரமும் அரங்கத்தினுள் அமர இருக்கைகள் போதவில்லை. அதனால் அரங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எண்ணற்றவர்கள் நின்றுகொண்டே மாநாட்டு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போதைய காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான மாநாட்டை அரசியல் கட்சிகள்கூட நடத்தமுடியாது என்பதுதான் உண்மை.

தெற்காசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும். முற்போக்கு ஜனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூகநீதியும், தமிழ்நாட்டின் எதிர்வினையும். தமிழீழ விடுதலைக்கான அரசியல் நகர்வுகளும், நம் உடனடி கடமைகளும் என்பது போன்ற தலைப்புகளில் கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் போராடுவதை விடுத்து உரிமையைக் காக்க வீதிக்கு வாருங்கள் என்று திருமுருகன் காந்தி மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

காசி ஆனந்தன்

மாநாட்டில் பேசிய கவிஞர் காசி ஆனந்தன், “தமிழீழத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ஜாதி, மதம் என்பதை மறந்து நாம் அனைவரும் ஒரே இனம் என்ற எண்ணத்தில் போராடினால் மட்டுமே தமிழீழம் சாத்தியமாகும்” என்றார்.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியபோது, “ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று ஏற்க மறுப்பவர்களும், புலிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களும் இந்த தமிழ் மண்ணில் நிலைத்து நிற்க முடியாது. எம்மினம் அழிந்தபோதும், எம்மினத்தை பிற மாநிலக்காரர்கள் தாக்கியபோதும் வாய் திறக்காதவர்கள் எல்லாம் இன்று எம்மினத்தை ஆள நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது? தமிழ் மாநில பிரச்னைகளுக்கு வாய் திறக்காதவனெல்லாம் இங்கு சூப்பர் ஸ்டார். வெட்கப்பட்டுக்கொள் தமிழினமே” என்றார்.

மாநாட்டில் பேசிய திருமுருகன் காந்தி ” ‘வெல்லும் தமிழீழம்’ என்ற இந்த முழக்கத்தைச் சொல்லும்போது இந்திய அரசு அஞ்சுமேயானால், மீண்டும் மீண்டும் சொல்வோம் ‘வெல்லும் தமிழீழம்’ என்று. இன்னும் எத்தனை காலத்துக்குதான் இனப்படுகொலை நடந்துவிட்டது எனப் பேசப்போகிறோம். வெறும் சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர்வதோடு நம்முடைய கடமை நின்றுவிடக் கூடாது. அடுத்து என்ன செய்தால் தமிழீழம் மலரும் என்று சிந்தித்து அடுத்தகட்டத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எப்படி காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் விவாதப் பொருளாக மாறியதோ? அதுபோல தமிழீழமும் இந்தியாவின் விவாதப்பொருளாக மாற வேண்டும். அதற்கான முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும். இந்தியாவிலுள்ள தேசிய இனத் தலைவர்கள், பல தேசிய இனமக்கள், இந்திய ஊடகம் என அனைத்துத் தரப்பினரும் தமிழீழத்தை விவாதப் பொருளாக எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய மக்களுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலை தெரியும். இந்தியா என்ற ஒரு நாடு இனத்துக்குச் செய்த மிகப்பெரிய துரோகத்தை இந்திய மக்கள் மட்டுமல்ல… தெற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 9 வருடங்களாக தமிழர்கள் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதும் தமிழீழத்தை விவாதப்பொருளாக மாற்ற முடியவில்லை. இது நடக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக தமிழினத்துக்கு ஆதரவாகப் பல தேசிய இனங்கள், பல நாடுகள் ஒன்று சேரும். சேனல்- 4 எடுத்த ஆவணப்படத்தைத் தவிர நம்மிடம் என்ன ஆவணம் இருக்கிறது? நம்மிடம் திறமையான கலைஞர்கள் இல்லையா? ஆஸ்கர் வாங்கும் அளவுக்குத் திரைத்துறையில் சாதித்து இருக்கிறோம். ஆனால், நம்மினம் பற்றிய ஒரு ஆவணப்படம் இல்லை. வரலாற்றைத் தெரிந்துகொண்டும் நாம் அதனை ஆவணப்படுத்தவில்லை என்றால், எவனோ ஒருவன் அவன் விருப்பத்துக்குத் தமிழினத்துக்கு தலையங்கம் எழுதிவிடுவான். தமிழகமே எழுச்சி கொள். இல்லையென்றால் இன்று தமிழீழத்துக்கு நடந்தது, நாளை தமிழ் நாட்டுக்கும் நடக்கும்!” என்று முழங்கினார். திருமுருகன் காந்தி பின்னர் பேசிய பழ.நெடுமாறன் “புலிகள் இருந்தவரை இந்துமாக் கடலை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியவில்லை. இன்று நிலைமை அப்படியல்ல. இந்துமாக்கடல் சீனாவின் கட்டுக்குள் சென்றுவிட்டது. இந்தியாவில் டெல்லியில் இருக்கும் புத்திசாலிகளே தெரிந்துகொள்ளுங்கள். இந்தியா மிகப்பெரும் ஆபத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்காளம், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கெனவே சீனாவின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது. தற்போது இந்தியப் பெருங்கடலும் அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லவிருக்கிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் இந்தியாவுக்கு மட்டுமல்ல… தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்தக் கடல் நம்மிடம் இருக்கும் வரைக்குமே இந்தியாவுக்குப் பாதுகாப்பு. அதற்கு தமிழீழம் அமைய வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்.” என்றார்.

மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது போல தமிழீழம் அமையவேண்டுமானால், அதுபற்றிய விவாதம் இந்தியா முழுவதும் நடத்தப்பட வேண்டும். தமிழீழம் அமைவதென்பது இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டும் நன்மை பயக்காது; ஒட்டுமொத்த இந்தியாவின் நன்மைக்கே அது வழி வகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மையும் கூட!

Share:
Read More

Tuesday, 20 February 2018

மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்?

ஈராக்கின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியம் செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் ஈராக் அறிவித்தது. இந்நிலையில், கிர்குக் பகுதியில் ஈராக்கிய அரசுப்படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அல்-சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 27 ஈராக் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை தங்களது இயக்கத்தினர் நடத்தியதாக ஐ.எஸ் இயத்தின் ஊடகமான அமாக் செய்தி வெளியிட்டுள்ளது.

Share:
Read More

சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!


இன்னுமொரு மரணமாய் நிகழ்ந்திருக்கிறது விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி சந்திரச்செல்வனின் மரணம். தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் அடிபட்டுக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் பக்கம் உண்மையாய் யார் இருக்கின்றனர் என சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். இந்த சண்டை நடந்தபோதே இந்த வீரரின் மரணமும் சலனமின்றி நிகழ்ந்திருக்கிறது. இப்போழுதெல்லாம் பத்திரிகைகளிலோ, இணையத்தளங்களிலோ முன்னாள் போராளிகள் மரணம் என்ற செய்தி வெறும் செய்தியாகிவிட்டது. ரெஸ்ட் இன் பாஸ்ட் என்றுவிட்டு கடந்து சொல்லுகிறோம். இதே வீரர்கள் அன்று களத்தில் சண்டையிட்டு சந்தனப் பேழைகளில் கொண்டு செல்லப்பட்டபோது நிறையுவும் சிந்தித்தோம். நிறையவும் கலைப்பட்டோம். இன்றும் அவர்கள் ஒரு களத்தில் வீழ்கின்றனர் என்ற நுண் அரசியலை புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஒரு மரணம் நடைந்தால் அது பற்றி விசாரணை செய்யப்படும். திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை இலங்கை அரசாங்கம் பிரதேசத்திற்கு பிரதேசம் பணியமர்த்தியுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக பல்வேறு விதமான நோய்கள் காரணமாகவும் மர்மமாகவும் முன்னாள் போராளிகள் இறக்கின்றனர். இந்தக் கூட்டு மரணங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவுதும் எடுக்கப்படவில்லை. எல்லாமே சாதாரண மரணங்கள்தான் என கடந்து செல்லும் அரச இயந்திரத்தை விடுவோம். நாம் என்ன செய்கிறோம்? இந்த மரணங்கள் எல்லாவற்றையும் வெறும் மரணங்களாய் கடந்து செல்ல நிர்பந்திப்பது எவ்வளவு குரூரமானது. ஈழத்தில் போர் முடிக்கப்பட்ட பின்னர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட போராளிகள் இரண்டு, மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். தடுப்பு முகாம் என்பது புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மாபெரும் வாதை முகாம் என்ற உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அங்கிருந்து வெளிவந்த பின்னர் சில போராளிகள் பல்வேறு நோய்களில் இறந்த சம்பவங்கள் ஈழத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியது. இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் அதனைக் குறைக்கும் முகமாக இந்த செயலணி, வடகிழக்கு ஈழ மக்களிடையே அமர்வுகளை நடத்தி நல்லிணக்கத்திற்கான ஆலோசனைகளை கோருவதாக கூறியது. இந்த நிலையில் குறித்த செயலணியின் கருத்தறியும் அமர்வில் ஒரு முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய சாட்சியமே இலங்கை அரசை மற்றுமொரு இன அழிப்பு குற்றத்தில் தள்ளியது. தமக்கு தடுப்பில் வைத்து ஊசிகள் ஏற்பட்டதாகவும் அவை தமது உடல் வலுவை பாதிக்கும் விச ஊசிகளாக இருக்கலாம் என்று தாம் அஞ்சுவதாகவும் அதன் பின்னர் உடலில் மாற்றங்களை உணர்ந்ததாகவும் அந்த முன்னாள் போராளி குறிப்பிட்டார். அப் போராளியின் சாட்சியம் “கிரேசிமா நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டா் கூட கண்டிப்பா இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான். எங்கண்ட விரலை வெட்டிப்போட்டு தம்பி தெரியாம வெட்டீட்டன் நான் அம்பு வில்லு தாறன் உன்னை பாதுகாக்க என கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. யுத்த தர்மம் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தர்மத்தைப் பற்றி கடைசிவரை போதிக்க வேண்டும். சரணடையப்போறவங்களைச் சுடுவது நியாமமில்லை. ஏனெனில் அவர்கள் நிராயுதபாணிகள். நான் ஒரு முனைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயண உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விழங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. 12 ஆயிரம் போராளிகளிற்கும் நீங்கள் மறுவாழ்வு அளித்தீர்கள் என்றால்தான் இந்தப் போராட்டம் திரும்ப துளிர்க்காது ”குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினி 2013இல் விடுவிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் புற்றுநோயில் இறந்தார். அவரது மரணம் இடம்பெற்ற நாட்களில் புதுக்குடியிருப்பை சேர்ந்த மற்றுமொரு முன்னாள் போராளி திடீரென மயக்கமுற்ற நிலையில் இறந்தார். அத்துடன் அதற்கு முன்னரும் பின்னரும் சில முன்னாள் போராளிகள் மரணமடைந்தமையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றன. தமிழினி அவர்களின் மரணம் இடம்பெற்றுச் சில நாட்களில் கிளிநொச்சியில் கௌரி என்ற முன்னாள் போராளி புற்றுநோயில் இறந்தார். இவ்வாறு முன்னாள் போராளிகள் புற்றுநோயினாலும் வேறு பல மரணங்களாலும் இறந்த செய்திகள் ஏனைய முன்னாள் போராளிகளின் மத்தியிலும் ஈழை மக்களிடத்திலும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தின. தமிழினி விடுதலைப் புலிகளின் காலத்தில் ஓய்வற்று பணியாற்றியமையால்தான் புற்றுநோய் வந்து இறந்தார் என்று அவரது கணவர் வாதிட்டதுடன் இவ்வாறான சந்தேகங்கள் அரசியல் பிழைப்புக்கானவை என்று கூறியிருந்தார். ஈழ மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய போராளிகளின் தொடர் மரணங்கள் மக்களை சந்தேகத்திற்குள்ளாக்குவது இயல்பானது. அதனை மருத்துவ ரீதியாக நிரூபிப்பது மருத்துவதுறை சார்ந்தவர்களின் வேலை. இந்த நிலையில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் டிகுணதாசன் என்ற முன்னாள் போராளியும் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவரது நோய் குறித்தும் மர்மம் காணப்பட்டதாக அவரது நண்பர்கள் கூறினார்கள். வவுனியா நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையரான முன்னாள் போராளி ஆசீர்வாதம் ஸ்ரிபன் (வயது 36), சாவடைந்தார். புளியங்குளம் சந்தியில் பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது, திடீரென மயக்கமடைந்து கீழே அவர் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் இவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இனியன் என்ற முன்னாள் போராளி (2.01.2017) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 34வயதான ரிசிகரன் என்ற இயற்பெயரை உடைய இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை. கடன் பிரச்சினையால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என இவரது மனைவி கூறினார். அத்துடன் முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி இராசதுரை திக்சன் (வயது 26) ( 2016-12-11) சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோட்டப் பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளி வவுனியா மாமடு- சேனைப்பிலவைச் சேர்ந்த பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 வயதுடைய இரத்தினசிங்கம் ஆனந்தராசா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக சாவடைந்தார். இறுதி யுத்தத்தினால் விழுப்புண்னடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி செல்வம் என்றழைக்கப்படும் மயிலன் மோகன் 10.12.2015 அன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இறுதி யுத்தத்தில் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டு விழுப்புண்னடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவடைந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாலதிபடையணியின் முன்னாள்போராளியும், மணலாறு கட்டளைத் தளபதியாக இருந்த குமரன் என்பவரின் துணைவி சந்தியா எனப்படும் முன்னாள் போராளியே தாய்லாந்தில் அக்டோபர் முதல்வாரம், 2017 சாவடைந்தார். இவர் விடுதலைப் புலிகளின் மாலதி படையணியில் இணைந்து தாயகவிடுதலைக்காக போராடியவர். சிறந்த படைப்பாளியாகவும் விளங்கியவர். காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி இராசரத்தினம் ஸ்ரீபவன் (வயது – 40) ஜீலை 31,2017 அன்று உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி உயிரிழந்துள்ளார். இறக்கும் முன்னர் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமை கண்டறியப்பட்டது. பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி அமலதாஸ் (வயது46) நவம்பர் 3, 2016 அன்று திடீரென மரணித்துள்ளார். உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்காக படுக்கைக்காக சென்ற வேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். இவர் மயக்கத்துடன் தான் இருக்கின்றார் என நினைத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே மரணமடைந்தமை தெரியவந்தது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட இவரது மரணம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இவரது மனைவி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானின் சாரதி முன்னாள் போராளி ராகுலன் என்றழைக்கப்படும் சசிகுமார் ஜூலை 15, 2016 திடீர் மரணம் அடைந்தார். அத்துடன் திருகோணமலை மாவட்டம் புலத்தினைச் சேர்ந்த மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி பேரின்பராசா தனபாலசிங்கம் (40) என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஓகஸ்ட் 2, 2016 அன்று அனுராதபுரம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். விபத்தினால் பாதிக்கப்பட்ட இவருக்கு தலையில் விறைப்புத் தன்மை காணப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து விடுதலைக்காக போராடி கடந்த 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வின்பின் தனபாலசிங்கம் விடுதலையானார். போராளிகளின் சமூக இன பற்றை அழிக்கும் உளவியல் போர் ஒன்றே புனர்வாழ்வு என்ற தடுப்பு – வாதை முகாமின் நோக்கமாகும். அத்துடன்
வதைமுகாமின் அறிவிப்பு, முள்வேலி, படைகளின் அணுகுமுறை, வழங்கப்படும் உணவு, தங்கியிருந்த அறைகள், பிரிக்கப்பட்ட முறைகள் எனப் பலவும் நூதனமாக அக வாதைகள் சார்ந்தது என்பதை வெற்றிச் செல்வி தன்னுடைய ஆறிப்போன காயங்களின் வலி (பம்பைமடு வதை முகாம் தொடர்பான பதிவு) புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். திருகோணமலையில் சிங்கள அரசின் பாரிய இன அழிப்பு வதைமுகாங்கள் இருந்த விவகாரமமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பல முன்னாள் போராளிகளும் ஈழ மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுள்ளார்கள். புனர்வாழ்வில் இருந்தபோது தமக்கு புரயிலர் கோழிகளே அதிகமும் – பெரும்பாலான நாட்கள் தமக்கு வழங்கப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சொன்னார். தடுப்பில் இருந்தபோது வழங்கப்பட்ட அப்பிள், ஒரேஞ்சுப் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று வெளியில் இருந்த சில மருத்துவர்கள் கூறியதாக இன்னுமொரு முன்னாள் போராளி சொல்லியிருந்தார். ஆனால் தடுப்பில் இருந்த நிலையில் இருந்த விரக்தி, அழுத்தம் காரணமாக இதை குறித்தெல்லாம் யோசிக்கும் நிலையில் தாம் இருக்கவில்லை என்று முன்னாள் போராளிகள் குறிப்பிடுகிறார்கள். இறுதிப் போரின் பின்னர், வதை முகாங்களிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகள் பலரும் பல உடல் நோய்களுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சு முன்னாள் போராளிகள் மருத்து ஆய்வுக்கு பெயர்களை பதிவு செய்யுமாறு கோரியது. பல முன்னாள் போராளிகள் தமது உடலை ஆய்வு செய்ய பெயர்களை பதிவு செய்துள்ளனர். மனம் தளராமல் அனைத்து முன்னாள் போராளிகளும் இந்த ஆய்வுக்கு முன்வரவேண்டும் என்றும் வடக்கு சுகாதார அமைச்சு கூறியது. அத்துடன் உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விபரங்களும் மருத்துவம் பெற்றவர்களின் விபரங்களையும் வடக்கு அரசு திரட்டியது. எனினும் கரிசனை பூர்வமாக வடக்கு மாகாண அரசு இதில் ஈடுபடவில்லை. இன்னமும் போராளிகளின் மரணங்கள் நீடிப்பதற்கான காரணத்தை கண்டறியவில்லை. சாதாரணமாகவே முன்னாள் போராளிகள் தம்மை அழித்துக்கொள்ளும் ஒரு சூழலுக்குள்தான் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தோல்விகள், நீதியற்ற நடவடிக்கைகள், சமூக நெருக்கடிகள் என்பன அவர்களை பெரும் அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன. பெருமளவான முன்னாள் போராளிகளின் தற்கொலை மரணங்கள் இதன்பாற்பட்டே நிகழ்ந்துள்ளன. இதற்கான பொறுப்பை வெறுமனே சிங்கள அரசிடம் மாத்திரம் தள்ளிவிட முடியாது. முன்னாள் போராளிகளுக்கு அவர்களின் கல்வி அறிவுக்கு ஏற்ப அரச தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வாழ்வாதரக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் முனைந்திருக்க வேண்டும். வேலையின்மை, இராணுவ நெருக்கடி, உடல் நோய்கள் என மன அழுத்தங்களின் மத்தியில் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும் எதனையும் அறியாமல், உணராமல் வாழ்ந்த முன்னாள் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் விச ஊசி குறித்த செய்திகள் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன. வவுனியாவில் நடந்த சிறிலங்கா அரசின் கருத்தமர்வில் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளிக்கையில் இந்தச் செய்தி தம்மை மீண்டும் பெரும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தியிருப்பதாக கூறினார். தானும் உடல் ரீதியாக மாற்றங்களை உணர்வாதாகவும் ஆனால் இந்த செய்திகளால் மேலும் பாதிக்கப்பட்டு தமது வாழ்வும் குடும்பமும் இன்னும் பாதிக்கலாம் என்றும் இருக்கும்வரை எதையும் அறியாமல் இருப்போம் என்றும் அவர் கூறினார். மதுப்பழக்கம், புகைத்தல் பழக்கம் இல்லாத முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறு புற்றுநோய் ஏற்பட முடியும் என்று இலங்கை பராளுமன்றத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினர். இதுவரையில் 107 போராளிகள் இறந்துள்ளதாகவும் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் இது தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் மருத்துவ பரிசோதனை இடம்பெறவேண்டும் என்றும் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். விச ஊசி போட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார். முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதியை கோருவேன் என்று அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கம் ஆய்வுகள், பரிசோதனைகள் எதுவும் இடம்பெறாமலே இராணுவ ரீதியான நம்பிக்கை மற்றுத் பௌத்த மத ரீதியான நம்பிக்கையின்பால் பேசுவதாக தோரணை செய்துகொண்டு மறுப்பு வெளியிட்டது. முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்ற வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. தமது புனர்வாழ்வு நடவடிக்கையை சர்வதேசம் வந்து பார்வையிட்டதாகவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன கூறினார். இலங்கை அரசு தான் இழைத்த குற்றங்களை எப்போது ஒப்புக்கொண்டது? முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரச படைகள் இழைத்த இனப்படுகொலைக் குற்றங்களை – சாட்சியங்களை – ஆதாரங்களை பார்த்தவர்களுக்கு சிறிலங்கா அரசு பூச் சுற்ற முடியாது. சிங்கள அரசு எதனையும் செய்யும். தமிழ் இனத்தையும் ஈழப் போராளிகளையும் அழிக்க சிங்கள அரசு எதனையும் செய்யும் என்பதே கடந்த கால வரலாறு. ‘இந்த குற்றச்சாட்டை முழுமையாக இலங்கை இராணுவம் மறுக்கிறது, நிராகரிக்கிறது என்றும் இலங்கையானது பௌத்தத்தை பிரதானமாகவும் ஏனைய மதங்களை முக்கியமானதாகவும் மதிக்கின்ற பின்பற்றுகின்ற ஒருநாடு என்றும் எமது இராணுவம் ஒரு மிருகத்திற்குக்கூட விஷத்தைக் கொடுத்ததில்லை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர கூறினார். இவ்வாறு இவர் கூறினாலும் ஈழ இறுதிப் போரில் கொத்துக் குண்டுகளை போர் தவிர்ப்பு வலயங்கள்மீது சிங்கள இராணுவம் வீசியதையும் நஞ்சுக் குண்டுகள் அடித்து மக்களையும் போராளிகளையும் பரிதாபகரமாக இனப்படுகொலை செய்ததையும் உலகமே அறியும். புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியும் என்றும் இதன் அண்மைய உதாரணம் அலக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ ((Alexander Litvinenko) ரஸ்யா உளவுத்துறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புற்றுநோயினால் இவர் 2006 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இறந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. ரஸ்யாவின் புலனாய்வுத்துறையில் (Federal Security Service (FSB) and KGB) அதிகாரியாக ரஸ்யாவின் அரச தலைவர் விளமிடீர் பூட்டினுடன் பணியாற்றிய அலக்ஸ்சாண்டர் லிற்வினஸ்கோ அங்கிருந்து தப்பிச்சென்று பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்து, பிரித்தானியாவின் உளவுத்துறையினருக்கு தகவல்களை வழங்கும் நபராக மாறியதால் அவரை புற்றுநோயிற்கு உள்ளாக்கி கொன்றதாக கூறப்படுகின்றது. போரில் ஈழத் தமிழர்களை பல்வேறு வழிமுறைகளில் இலங்கை அரசு கொன்றது. உணவை தடுத்து, மருந்துகளை தடை செய்து, போர் தவிர்ப்பு வலயங்கள்மீது அனல் தாக்குதல்களை நடத்தி, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் கொன்று வீசப்பட்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி தரையில் இருந்தித பின் பக்கமாக சுட்டுக்கொன்றதும் பெண் போராளிகளை பாலியல் வன்கொடுமை புரிந்து கொன்றதும் நடைபெற்றது. போரின் பின்னர் வடகிழக்கில் திட்டமிட்டு இன விருத்தியை தடுக்க கருத்தடைகள் இடம்பெற்றமையும் அம்பலமானவை. இலங்கை அரசு ஈழ தமிழ் இனத்தை அழிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதையே கடந்தகால வரலாறு உணர்த்துகிறது. நடந்து முடிந்த இனப்படுகொலை குறித்து மாத்திரமின்றி தற்போது மர்மமாக தொடரும் முன்னாள் போராளிகள் குறித்தும் நீதியான சர்வதேச விசாரணை ஒன்றே அவசியமானது. வரலாறு முழுவதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டமைக்கான காரணங்களை கண்டறிவதும் அவர்களின் நிலம் இன்ன பிற உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கான காரணங்களுக்கு மாத்திரமின்றி இனப்படுகொலைப் போரின் பாதிப்பால் தொடரும் இன அழிப்பு மரணங்களையும் குறித்தும் உண்மையை கண்டறிதலுக்காக சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தும் தமிழரின் போராட்டம் வலுவாக முன்னெடுக்கப்படவேண்டும்.
Share:
Read More

Tuesday, 13 February 2018

தமிழர்கள் தமிழில் மொழியில் இணையதளங்களை அவசியம் உருவாக்க வேண்டும்

தமிழர்கள் தமிழில் மொழியில் இணையதளங்களை அவசியம் உருவாக்க வேண்டும்

Share:
Read More

Monday, 12 February 2018

கூகுல் அட் சென்ஸ் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது

கூகுல் அட்  சென்ஸ் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது கூகுல் நிறுவனம் இதனை  உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ்மொழி மாத்திரமே அங்கீகரித்துள்ளது 
Share:
Read More

இந்தோனேசியாவில், கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து

இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அதே நேரத்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களும், இந்துக்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர்.

சமீப காலமாக அங்கு மத அடிப்படையிலான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் மத சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித்தான் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், அங்கு உள்ள யோக்யகர்த்தா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற கிறிஸ்தவர்கள் 4 பேர் கத்தியால் சரமாரி குத்தப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

“இந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலா என்பதை உடனடியாக உறுதி செய்ய முடியாது, தாக்குதல் நடத்திய நபரை பிடித்து விட்டோம், அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபரை பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் பல்கலைக்கழக மாணவராக இருக்கக்கூடும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம், யோக்யகர்த்தா நகரில் வசிக்கிற கிறிஸ்தவ மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share:
Read More

Sunday, 11 February 2018

HP கொம்பியூட்டர் பற்ரி திருத்துவது எப்படி ?

உங்களது கொம்பியூட்டர் பற்ரி வேலை செய்யவில்லையா கவலை வேண்டாம்,அதன் விலை மிக உயர்வாக இருக்கலாம் இந்த காணொளியில் நீங்களே அதனை சரிசெய்யும் முறையுள்ளது இதன மூலம் மலிவாக சரி செய்யலாம் 
Share:
Read More

Tuesday, 6 February 2018

புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை Song


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி (பூப்பூக்கும் ஓசை) கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2) சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை) சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2) சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைக்கள் ஓசை சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை)
Share:
Read More

Monday, 5 February 2018

இரத்த சத்தி எடுப்பதில் இருந்து விடுதலை

இரத்த சத்தி எடுப்பதில் இருந்து விடுதலை 
Share:
Read More

Saturday, 3 February 2018

விஜயின் அதிரடி அறிவிப்பால், கலங்கி போன அரசியல்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் விளங்கி வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-62 படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தீவிர அரசியலில் குதித்து விட்டனர், இவர்களை தொடர்ந்து தளபதி விஜயும் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டே உள்ளன.இந்நிலையில் தற்போது விஜயும் ரஜினியை போலவே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைக்க www.vijaymakkaliyyakam.in என்ற இணையதளம் தொடங்கியுள்ளார்.

விஜயின் இந்த நடவடிக்கையால் அரசியல் வட்டாரமே சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் தளபதி விஜயும் அரசியலில் நுழைய உள்ளாரோ என பலர் குழப்பமடைந்துள்ளனர்.
Share:
Read More

Friday, 2 February 2018

நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது

நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திரோபாயங்களிலும் இன்று நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் நாடு பயணிக்கும் பாதையை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று நாட்டிற்கு தேவையாக இருப்பது மன்னராட்சி முறையன்றி மக்களாட்சி முறையே ஆகும் என்பதுடன் இதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த மூன்று வருட காலமாக தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஊழல் அரசியல்வாதிகள் இன்று ஒரே குழுவாக இணைந்திருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவோ அன்றி தமது தனிப்பட்ட அபிவிருத்திக்காகவே அதிகாரத்தைக் கேட்கின்றனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும், அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்து அரச வளங்களை அழிவடையச் செய்யும் அரசியல்வாதிக்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் அப்போதைய தலைவர்களால் மேற்கொள்ளப்படாததுடன், அவற்றைப் பற்றி உரையாட கூட அவர்கள் விரும்பவில்லை என்பதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகள் அதிகரித்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் என்றவகையில் தான் மத்திய வங்கி தலைமையகத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குகொண்டபோது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக உரையாடியமையினால், மறுநாள் காலை அலரிமாளிகைக்கு தன்னை அழைத்த முன்னாள் தலைவர் அரசாங்கத்தின் அமைச்சர் என்றவகையிலும் கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையிலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக பேசக்கூடாது எனவும் வேறு பயணமொன்றை மேற்கொள்ள தயாராகின்றீர்களா என தம்மிடம் கேட்டதாகவும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவது மாத்திரமன்றி அது தொடர்பாக பேசக்கூட முடியாது எனில் மக்களின் நன்மைக்காக தனியானதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் அன்று உறுதியாக தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுகையில் கட்சி, நிறம், பதவி, உறவுகள் மற்றும் நட்பு என்ற எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாததுடன், இன்று நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தமது சகோதரர்களுக்கும் அவ்விதமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தான் செயலில் தற்போது காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேசத்தின் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, என்.பி.சமந்த உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனிடையே பொலன்னறுவை கலஹகல ஸ்ரீதர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

“கருணை ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான அளித்து, நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் மற்றும் ஜப்பான் கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்றதிகாரி கலாநிதி மிட்சுகி சுகியின் அன்பளிப்பில் இந்த நீர் சுத்திகரிப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கலஹகல ஸ்ரீ தர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடமும் இதன்போது ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.விகாராதிபதி பொலன்னறுவை பிரதேச பிரதான சங்க நாயக்கர் குருவாஓயே தம்மசித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் பொலன்னறுவை திம்புலாகல பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்கள் பலவற்றிலும் இன்று ஜனாதிபதி பங்குபற்றினார்.

முதலாவதாக திம்புலாகல, கல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அதன்பின்னர் யாய 08 அரச மரத்தருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஜனாதிபதி, 1989 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பொலன்னறுவை மக்களுக்காக மேற்கொண்ட முதலாவது அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாய 08 பாலத்தின் அருகே இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பிரதேச மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் யாய 05 ஸ்ரீ விசுத்தாராம விகாரைக்கு அருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அரலகங்வில மற்றும் விஜயபாபுர வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அரலகங்வில, அரசமர சந்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மிகுந்த வினைத்திறனுடனும் துரிதமாகவும் இடம்பெற்று வருவதாக வலியுறுத்தினார்.

ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயற்பட்ட உலக தலைவர்களுடன் அந்நாட்டு மக்களும் இணைந்து கொண்டுள்ளதைப் போல தாமும் மக்களுடன் இணைந்து ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share:
Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ, அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டு உள்ள இனப்பிரச்சனையை தீர்ப்பதுக்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். அவர்களும் வருகின்றோம், வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ளதென கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது” என தெரிவித்தார்
Share:
Read More

பந்தயத்தின் மூலம், பணம் சம்பாதித்த எலிசபெத் மகாராணி

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் குதிரை பந்தயம் மூலம் இதுவரை 6 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து 2017 வரை அவருடைய மாட்சிமைக்கு கீழ் உள்ள குதிரைகள் 2815 பந்தயங்களில் பங்கேற்று 451 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் பரிசி கிடைத்துள்ளது. அத்துடன் அதிக வெற்றிகள் பெற்ற குதிரைகளுக்கு சொந்தக்காரராக மகாராணி 11 ஆவது இடத்தில் உள்ளார்.

குதிரை பந்தயத்தை 1988 ஆம் ஆண்டே ஆரம்பித்திருந்தாலும் கடந்த 2016 ஆம் ஆண்டே குதிரை பந்தயத்தில் சிறப்பானதாக இருந்துள்ளது. ஏனெனில் 2016 ஆம் ஆண்டே பரிசாக அதிகளவு பணத்தை பெற்றுள்ளார்.

91 வயதாகியும் குதிரை பந்தயத்தில் இன்னமும் மகாராணிக்கு ஆர்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:
Read More

Thursday, 1 February 2018

இந்தியாவிற்கு கிடைத்த முக்கிய இடம்

உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Westyle="width:100%;height:100%;"h) நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டாலர் ஆகும். அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. அந்நாட்டின் பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 19,522 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 2017-ம் ஆண்டு, இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

இந்தியாவின் 67 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதையே இந்த ஆய்வும் கூறியிருக்கின்றது. 2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:
Read More

Popular Posts

Recent Posts

Blog Archive